Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 22nd October 2018

உலக செய்திகள்
  1. டிசம்பர் மாதம் சீனாவின் செங்டு பகுதியில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே Hand – in – Hand (ஹேண்ட் – இன் – ஹேண்ட்) இராணுவப் போர் பயிற்சியின் 7-வது பதிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.
  2. அண்ணா ப்ரன்ஸ்(Anna Burns) என்பவர் தனது மில்க்மேன் என்ற புதினத்திற்காக புனைவுக் கதைகளுக்கான பெருமை மிகு மேன்புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஏவுகணை நாயகரான டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு (2018 அக்டோபர் 15) கலாமின் பார்வை – கனவிற்கான தைரியம் என்ற கருத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் இணைய தளத்தை நாட்டிற்காக அர்பணித்துள்ளார்.
  2. சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையமானது (EPCA – Environment Pollution Prevention and Control Authority) தேசியத் தலைநகரான டெல்லி பிராந்தியங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஒரு தரப்பட்ட பதில் செயல் திட்டத்தை (GRAP – Graded Response Action Plan) செயல்படுத்தத் தொடங்கியது.
  3. கர்நாடகாவின் பெங்களுருவில் உள்ள கெம்ப் போர்ட் மாலில் இந்தியாவின் முதல் இணைய சங்கேதப் பணத்திற்கான ATM (India’s First Bitcoin ATM) திறக்கப்பட்டுள்ளது.
  4. துப்புரவு, குடிநீர், சுகாதாரம், குழந்தைகள் நலம், மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக நீலகிரி மாவட்டமானது JRD டாடா நினைவு விருதைப் பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சமூக தொழில் முனைவரான சுஹைல் கு.தாண்டன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு மற்றும் சமூக செயற் சங்க குழுவின் கிராண்ட் விருதினை தனது விளையாட்டு அபிவிருத்திற்கான பங்களிப்பிற்காக வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சீனாவில் நகர்புறங்களில் மின்சாரச் செலவினங்களைக் குறைப்பதற்காக தெரு விளக்குகளுக்குப் பதிலாக, மனிதனால் உருவாக்கப்படும் செயற்கைச் சந்திரனை, ஜீசாங் சாட்டிலைட் லாஞ்ச் சென்டரிலிருந்து சீனாவானது 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கிய தினங்கள்
  1. தேசிய காவலர் நினைவு தினம் (National Police Commemoration Day-NPCD) – அக்டோபர் 21

No comments:

Post a Comment