Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 26th October 2018

உலக செய்திகள்
  1. உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள, குழந்தை இறப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அளவுருக்களைக் கொண்ட முதலாவது மனித மூலதன குறியீடு – 2018ல் (HCI – Human Capital Index) இந்தியாவானது, மொத்தம் 157 நாடுகளில் 115வது இடத்தைப் பெற்றுள்ளது.
  2. அமெரிக்காவின் மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் (FERC) தலைவராக அமெரிக்க வாழ் இந்தியரான “நீல் சட்டர்ஜி-யை” அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நியமித்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் “மம்தா காலியா”விற்கு 27வது வியாஸ் சம்மன் விருது அவரது “டுக்ஹம் சுக்ஹாம்” (Dukkham Sukkham) என்ற நாவலுக்காக வழங்கப்பட்டு உள்ளது.
  2. புகழ்பெற்ற நீதிபதியான பாலி எஸ். நாரிமனுக்கு, பொது நிர்வாகத்தில் சிறப்புத்துவத்திற்கான 19வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  3. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (IRDAI – Insurance Regulatory and Development Authority of India) பொது மற்றும் சுகாதார காப்பீட்டு கோரிக்கைகளை தவணைகளாக செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக, IRDAI-ன் நிர்வாக இயக்குனர் “சுரேஷ் மாத்தூர்” தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
  4. இந்தியாவின் முதல் ஆடம்பர சொகுசுக் கப்பலான “அங்கிரியா” (Angriya) – ஆனது மும்பையில் தொடங்கப்பட்டது. மும்பையிலிருந்து கோவா வரை செல்லும் இந்த சொகுசுக் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடங்கி வைத்துள்ளது.
  5. தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதை, குறிப்பாக காற்று மாசுபாட்டை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட, “ஹரித் தீபாவளி – ஸ்வஸ்த் தீபாவளி” (Harit Diwali – Swasth Diwali) என்னும் பிரச்சாரத்தை மத்தியச் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை அமைச்சகமானது தொடங்கியுள்ளது.
  6. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், பெண் இயற்கை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான, இந்தியப் பெண்கள் இயற்கை விவசாயத் திருவிழாவின் 5வது பதிப்பு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4ம் தேதி வரை புது தில்லியில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஓரிடம் முன்னேறி 2ம் இடம் பிடித்துள்ளார்.
Post a Comment