Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 28th October 2018

உலக செய்திகள்
  1. கேமரூனின் ஜனாதிபதி “பால் பியா” ஏழாவது முறையாக மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 30 வருட ஆட்சியை நீடித்துக் கொண்டுள்ளார்.
  2. 2018ம் ஆண்டின் WETEX கண்காட்சி (WETEX – Water, Energy, Technology and Environment Exhibition / நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி) துபாயில் உள்ள துபாய் சர்வதேச கண்காட்சி மையத்தில் தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. நாட்டில் நடைபெறும் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் கருப்புப்பணம், வங்கி ஊழல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிக்கும் பொருளாதார அமலாக்கத் துறையின் இயக்குனராக “சஞ்சய் மிஷ்ரா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. கேரள மாநில கல்வித் துறையில் நவீன தொழில் நுட்பங்களை அமல்படுத்தியதற்காக, கேரள அதிகாரியான “அன்வர் சதாத்” என்பவருக்கு AECT(Association for Educational Communication and Technology) சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
  3. சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்தல், இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியில் பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக, சியோல் அமைதி விருதுக்கான தேர்வுக் குழுவானது 2018ம் ஆண்டின் சியோல் அமைதி விருதை (SEOL Peace Award) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. புடாபெஸ்டில் நடைபெற்றும் வரும் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் “பூஜா தண்டா” ஐரோப்பிய முன்னாள் சாம்பியனான கிரேஸ் ஜேக்கப் புல்லனை வென்று வெண்கலம் வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. தனியார் உயிர்க் காப்பீட்டு நிறுவனமான பிஎன்பி மெட்லைப் (PNB Metlife) என்ற நிறுவனமானது தனது பங்குதாரர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு ‘குஷி’ (Kushi) என்ற செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Post a Comment