Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 3rd October 2018

உலக செய்திகள்
  1. இராக்கின் புதிய அதிபராக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான பார்ஹம் சாலிஹ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  2. ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனாடா நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. 2018ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
தேசிய செய்திகள்
  1. ரஞ்சன் கோகோய் உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோகோய்க்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
  2. இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நாளை இந்தியா வருகிறார்.
  3. அமைதி மற்றும் அஹிம்சையை, தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததற்காக, மஹாத்மா காந்திக்கு, அமெரிக்க அரசின், மிக உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  2. மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துகான “வயோஸ்ஸ்ரீத சம்மான் -2018” விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என, மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.
  2. 2016- ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தங்வேலு மாரியப்பன் ஜகார்த்தாவில் நடைபெறவிருக்கும் 3 வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.
Post a Comment