Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 4th October 2018

உலக செய்திகள்
  1. ஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். பார்ஹம் சாலே ஈராக்கின் மதவாத அரசியல்வாதி ஆவார்.
தேசிய செய்திகள்
  1. சாலை போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தொழில் துறைகளில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  2. ஐசிஐசிஐ வங்கி தலைமைச் செயல் அதிகாரி சந்தா கொச்சார் பதவி விலகினார். தற்போது புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சந்தீப் பாக்ஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
  3. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுக்கப்பட்ட முடிவில் சிறு மாற்றம் செய்து, மத்திய பிரதேசம் போபாலுக்கு பதிலாக, செகூர் (போபால் – செகூர் நெடுஞ்சாலை) மாவட்டத்தில் மனநல காப்பகத்திர்கான தேசிய நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  4. இந்திய குடியரசின் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான தேசிய சிறு தொழில்கள் நிறுவனமும் ரஷ்யாவின் சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  5. சர்வதேச சூரியஒளி கூட்டமைப்பின் (ISA) முதல் பொதுப்பேரவை கூட்டத்தினை புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. அர்ஜென்டீனாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 6-18 முதல் நடைபெறவுள்ள 3 வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அணிவகுப்பில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேகர் தேசிய கொடியை ஏந்த உள்ளார்.