Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 5th October 2018

தேசிய செய்திகள்
  1. சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு – 2018 (First Assembly of International Solar Alliance 2018), புதுடெல்லியில் விஞ்ஞான பவனில் அக்டோபர் 2 அன்று நடைபெற்றுள்ளது.
  2. இந்திரா (INDRA) பயிற்சி – இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் இணைந்து, உத்திரப் பிரதேச மாநிலம், பாபினா நகரில் 2018 நவம்பர் 18 முதல் 28 வரையில் கூட்டு இராணுவப் பயிற்சியில் (Indian – Russian exercise) ஈடுபடவுள்ளது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு INDRA-2018 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  3. இந்தியாவின் முதல் வெள்ளப் பெருக்கு மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (FFEWS – Flood Forecasting and Early Warning System) கொல்கத்தா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  4. இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இமாச்சல் பிரதேச மாநில உயர்நீதி மன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல்-க்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக நீதிபதி (ரஞ்சன் கோகோய் அக்டோபர் 03 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
  6. அமைதி மற்றும் அஹிம்சையை, தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்ததற்காக அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘அமெரிக்க பாராளுமன்றத்தின் தங்க பதக்கம்’ என்ற விருதை மகாத்மா காந்திக்கு வழங்குவது என அமெரிக்க பாராளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment