Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 6th October 2018

உலக செய்திகள்
  1. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ரிபப்ளிக் ஆப் குரோசியா(Republic of Croatia) நாட்டுக்கான இந்தியத் தூதராக அரிந்தம் பஷியை நியமனம் செய்துள்ளது.
  2. வட அமெரிக்க நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் USMCA (United States, Mexico and Canada) என்றழைக்கப்படும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மீது ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. மத்திய பிரதேச மாநில அரசானது நிவாரி(Niwari) என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. நிவாரி மத்திய பிரதேசத்தின் 52வது மாவட்டம் ஆகும்.
  2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)-வை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் வரிசையில், உத்திரப் பிரதேச மாநில அரசானது 11 இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தந்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளது.
  3. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு தேவையான மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்தியா விமானப்படை சார்பில் C-130J மற்றும் C-17 என்னும் இரு வானூர்திகளும், இந்திய கடற்படை சார்பில் INS TIR, INS Sujatha மற்றும் INS Shardul ஆகிய பேரிடர் மீட்பு கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  4. நாட்டின் முதல் சோளத் திருவிழா(Corn Festival) மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த் வாராவில் நடைபெற்றுள்ளது. இத்திருவிழாவானது சர்வதேச நிகழ்வாகும்.
விளையாட்டு செய்திகள்
  1. 3வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அர்ஜென்டீனாவில் உள்ள ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 06 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
  2. புது டெல்லியில் நடைபெற்ற டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டியில், இந்தியாவானது 6 தங்கம், 5 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
  1. உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 04