Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 7th October 2018

இந்திய செய்திகள்
  1. Economics Time (ET) நடத்திய 6வது கிராமப்புற உத்தி மாநாடு – 2018(ET Rural Strategy Summit – 2018) புது டெல்லியில் நடைபெற்றது.
  2. கனடாவின் பிரேசர் நிறுவனம், சிவில் சமூக மையத்துடன்(CCS – Centre for Civil Society) இணைந்து 2018ம் ஆண்டிற்கான பொருளாதார சுதந்திரக் குறியீட்டை (Economic freedom Index – 2018) வெளியிட்டது. உலகின் 162 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியாவானது 96வது இடத்தில் உள்ளது.
  3. மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்து துர்க் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் அல்போன்சா மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு(Geographical Indication) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
  4. மகாராஷ்டிராவின் புனேயில் லோனி கல்சார் பகுதியில் உள்ள மகாராஷ்டிரா தொழில் நுட்ப நிறுவனத்தின் (MIT – Maharashtra Institute of Technology) உலக அமைதி பல்கலைக் கழக வளாகத்தில் (World Peace University) உலகின் மிகப் பெரிய குவிமாடம் (World Largest Dome) திறக்கப்பட்டுள்ளது.
  5. இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority of India – NALSA) நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான மதன் பீமாராவ் லோகுரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  6. 2018ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு காங்கோவைச் சேர்ந்த மருத்துவர் “டெனிஸ் முக்வேஜாவும், ஈராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ‘நாடியா முராத்துக்கும்’ வழங்கப்பட்டுள்ளது.
  7. தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஈவன் அட்டார் ஆதாஹா, என்பவருக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பின் 2018ம் ஆண்டிற்கான நான்சென் அகதி விருது (2018 NHCR Nansen Refugee Award) வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. உலகளாவிய வர்த்தக உத்திகளில் இந்தியாவின் எதிர்கால ஈடுபாட்டினை மதிப்பாய்வு (India’s Global Trade Strategy) செய்வதற்காக ‘சுர்ஜித் எஸ். பல்லா’ தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழு ஒன்றை (High Level Committee) வர்த்தக அமைச்சகமானது அமைத்துள்ளது.
Post a Comment