உலக செய்திகள்
- மெக்சிகோவில் நடைபெறவிருக்கும் 46வது சர்வதேச செர்வன்டினோ திருவிழாவில் முதல் முறையாக இந்தியாவானது மரியாதை விருந்தினராக பங்கேற்றுள்ளது.
- சிரியா நாட்டில் பணியாற்றும் தனது இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிரியாவிற்கு நிலத்திலிருந்து வான்வெளியை தாக்கும் ஏவுகணை அமைப்பான S-300-ஐ ரஷ்யா அளித்துள்ளது.
இந்திய செய்திகள்
- அணுகுண்டு உள்ளிட்ட 1000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, சுமார் 350 கி.மீ. தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட “பிரித்வி – 2” ஏவுகணை ஒரிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. மொபைல் சாலஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும் திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை அழித்ததும் இதன் சிறப்பம்சமாகும்.
- 2018ம் ஆண்டிற்கான மின்னணு முறையிலான வழங்கீட்டை ஏற்றுக் கொள்ளும் அரசு தரவரிசைப் பட்டியலில் (GEAR – Government e-payment Adoption Ranking) 78 நாடுகளில் இந்தியா 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
- ஆட்டோ மற்றும் வாடகை வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மைசூர் நகர காவல் துறையானது “மை சூரக்ஷா” (My Suraksha) மொபைல் செயலியைத் தொடங்கியுள்ளது.
- ஜெனீவாவின் ஆயுதக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் தூதராகவும் ‘பங்கஜ் ஷர்மா’ நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
- இந்திய ரிசர்வ் வங்கியினால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும், இந்த ஆண்டுக்கான 4வது பணக்கொள்கை சம்பந்தமான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.
- இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியானது (SIDBI – Small Industries Development Bank of India) தேசிய அளவிலான தொழில் முனைவோர் பிரச்சாரமான ‘உதயம் அபிலாஷா’-வை தொடங்கியுள்ளது. (National level entrepreneurshim awareness campaign – Udyam Abhilasha)
No comments:
Post a Comment