Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRBTamil Current Affairs 2nd October 2018

உலக செய்திகள்
  1. உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ தகுதியான நகரங்கள் குறித்து, லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள, உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி 43-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  2. இயற்கைக்கான உலகளாவிய நிதி (WWF – World Wide Fund For Nature) என்ற அமைப்பின் “T × 2” என்ற திட்டத்தின் படி பத்தாண்டு காலத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் உலகின் முதல் நாடாக நேபாளம் உருவெடுத்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் “இஞ்செட்டி சீனிவாள்” என்பவரின் தலைமையில் பெரு நிறுவன சமூக பொறுப்புடைமை-2018 (Corporate Social Responsibility – CSR) என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (Ministry of Corporate Affairs) நியமித்துள்ளது.
  2. ஆசிய வளர்ச்சி வங்கியானது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் முதல் பல்திறனுடைய பூங்காவை (First Multi-Skill Park) அமைப்பதற்காக 150 மில்லியன் டாலரை கடனாக வழங்கவுள்ளது.
  3. நிதி ஆயோக் மற்றும் ஐ.நா. சபை என்ற இரு அமைப்புகளும் இணைந்து இந்தியாவில் 2018-2022 என்ற காலத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான கட்டமைப்பில் (Sustainable Development Framework) கையெழுத்திட்டுள்ளன. இந்த கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு இந்தியாவில் ஐ.நா. சபை சார்பாக இந்தியாவின் தேசிய எதிரினை (National Counter Part) என்பது நிதி ஆயோக் ஆகும்.
  4. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் பெருகிவரும் பிரச்சனைகளை தடுப்பதற்காக, நிதி ஆயோக், சங்கிலித் தொகுதி (Block Chain) முறையிலான பதிவேடு மற்றும் இணைய தள விவகாரங்கள் (Internet of Things) ஆகியவற்றின் மூலம் மருந்துகளின் உண்மை நேர விநியோகப் பாதையைக் கட்டுப்படுத்த ஆரக்கிள் (Oracle) நிறுவனத்துடன் ஒப்பந்த தீர்மானம் (Statement of Intent – SOI)கையெழுத்தாகி உள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய அரசானது மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு (SDRF – State Disaster Responsive Force) இதுவரை அளித்து வந்த நிதியை 75% லிருந்து 90% உயர்த்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. கொரிய ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தைவான் வீரர் “சோவ் டியன் சென்” இந்தோனேசியாவின் டாமி சுகியர்டோவுவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
முக்கிய தினம்
  1. சர்வதேச முதியோர் தினம் – அக்டோபர் 01