Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affaairs 29th October 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்கா – ஜப்பான் கூட்டுத் தயாரிப்பிலான இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கும் ஏவுகணையான எஸ் எம் – 3 பிளாக் 2A(sm-3 Block IIA) என்ற இடைமறி ஏவுகணை சோதனையை அமெரிக்க இராணுவம் ஹவாய் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
  2. இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவிற்கானத் தூதுவருமான சச்சின் டெண்டுல்கர், பூடானின் தலைநகரான திம்புவில் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH Innovation(water, sanitation and Hygiene) புதுமைத் திட்டத்திற்கான வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
  3. வேளாண் விஞ்ஞானி S. சுவாமிநாதன், புது டெல்லியில் இந்திய உணவு மற்றும் விவசாயக் குழுவினால் (Indian Council of Food and Agriculture – ICFA) ஏற்படுத்தப்பட்ட முதலாவது உலக வேளாண் பரிசினை வென்றுள்ளார் (First World Agriculture Prize – 2018 – M.S. Swami Nathan)
  4. மியான்மர் ஒன்றியக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக சௌரப் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் ஈரானின் இந்தியத் தூதராக உள்ளார். இவர் விக்ரம் மிசிரி என்பவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்
  1. பஞ்சாப் மாநில அரசானது புற்றுநோய் மற்றும் மனித டி.என்.ஏ வை பாதிப்பிற்குள்ளாக்கும் களைக் கொல்லியான க்ளைபோசாட்டின்(GLYPHOSATE) விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
  2. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது புது டெல்லியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான(SPARC – Scheme For Promotion of Academic and Research Collaboration) வலைப் பக்கத்தை(Portal) தொடங்கியுள்ளது.
  3. 2018ம் ஆண்டின் உலகளாவிய விவசாயத் தலைமைக்கான மாநாடு புது டெல்லியில் துவங்கியது.(2018 – Global Agriculture Leadership Summit) மாநாட்டின் கருத்துரு: சந்தையுடன் விவசாயிகளை இணைத்தல் (Connecting Farmers to Market).
  4. அரியானா மாநில அரசு, நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளை அளிக்க ‘பசு சஞ்சீவனி சேவா’ என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
  5. மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் புது டெல்லியில் 10வது அணுசக்தி மாநாட்டை துவக்கி வைத்தார். இதற்கான கருத்துரு – “அணுசக்தி சுத்தமான மற்றும் அடிப்படையான ஆற்றல்” என்பதாகும்
Post a Comment