Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 10th November 2018

உலக செய்திகள்
  1. உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  2. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கி வரும் ‘எல்லைகளில்லாத பத்திரிக்கை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில், பத்திரிக்கை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் அளிக்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.
இந்திய செய்திகள்
  1. ஆந்திரப் பிரதேசத்தில் பழங்குடி பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  2. சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கடல்சார் இரு தரப்பு பயிற்சிகள் நவம்பர் 10 முதல் 21 வரை அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவை மையமாக வைத்து நடைபெறுகிறது.
  3. எல் & டியின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் புதிய ரோந்து கப்பல் ஐசிஜிஎஸ் வராஹோ அறிமுகப்படுத்தப்பட்டது.
  4. ஆப்பிரிக்காவின் மலாவியில் ‘ஜெய்ப்பூர் காலணி’ முகாமை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் அங்குள்ள பயனாளிகளுக்கு, இந்திய தயாரிப்பான இலவச செயற்கை கால் உறுப்புகளை வழங்கினார்.
  5. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல காப்பக காவல் நிலையத்தில் கிரைம் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம் என்ற பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் டெய்ஸி என்பவருக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சிறப்பு புலனாய்வு காவலருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  6. முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் குமார் குப்தா இந்திய போட்டி ஆணையத்தின்(CCI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. குவைத்தில் 11வது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வந்தது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனைப் படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளது.