Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th November 2018

உலக செய்திகள்
 1. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளைக் கொண்ட சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்கு தடை விதித்த (Sunscreen Products) உலகின் முதலாவது நாடாக தென் பசுபிக் தீவில் உள்ள நாடான பலாவு உருவெடுத்துள்ளது.
 2. பிரான்ஸின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் “எல்லைகளில்லாத பத்திரிக்கை நிருபர்கள்” என்ற அமைப்பின் கீழ் வழங்கப்படும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வீரதீரத்துடன் செயல்படும் நபர்களுக்கான விருதானது(2018), இந்திய பெண் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதிக்கு வழங்கப்பட்டுள்ளது
இந்திய செய்திகள்
 1. மணிப்பூர் மாநிலத்தில் ''தண்ணீரில் மிதக்கும் கைத்தறி குடிசைகள்'' தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
 2. 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றியத்தின் (ITO – International Telecommunication Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 3. உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியப் பிரதமரால் நவம்பர் 12 அன்று தொடங்கப்பட்டுள்ளது
 4. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளுக்கான தேசிய மாணவர் படையின் (National Cadet Corps – NCC) இயக்குநரகம், ஜோத்பூரில் நடைபெற்ற அகில இந்திய வாயு சேனைப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. டெஸ்ட் வரலாற்றிலேயே 2 இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் நிகழ்த்தியுள்ளார்.
 2. மேற்கிந்தியத்தீவு அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்து, விராட் கோலி, தோனியின் சாதனையை உடைத்துள்ளார்.
 3. AIBA (International Boxing Association) பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பின் விளம்பர தூதராக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்.சி. மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
 1. 2019 – ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக குறையும் என மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. பூமிக்கு நிலவைப் போன்று மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இரங்கல்
 1. பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகாவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
முக்கிய தினங்கள்
 1. தேசிய கல்வி நாள் – நவம்பர் 11 (Dr ABJ அபுல்கலாம் பிறந்த நாள்)

No comments:

Post a Comment