Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th November 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரபல மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஸ்லோன் நிர்வாக கல்லூரியில் நடந்த 3வது இந்தியா குளோபல் உச்சிமாநாட்டில், ஹிந்தி நடிகர் அனுபம் கேருக்கு ‘சிறப்பு விருது – Distinguished Fellow’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  2. உஸ்பெக் தொழிலதிபரும், விளையாட்டு நிர்வாகியுமான கபூர் ரகிமோவ், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (AIBA) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  3. “The Fire Burns Blue : A History of Women’s Cricket in India” என்ற நூலை காருண்யா கேசவ் மற்றும் சித்தாந்தா பதக் ஆகிய இரண்டு விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.
தேசிய செய்திகள்
  1. ஈரானுக்கான இந்திய தூதராக இருந்த சௌரவ் குமார், மியான்மருக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரானுக்கான புதிய இந்திய தூதராக கத்தம் தர்மேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. நதிகளில் கப்பல்கள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக சிறிய அளவில் உள்நாட்டிலேயே ஆங்காங்கே துறைமுகம் மற்றும் சரக்கு போக்குவரத்து முனையங்கள் தற்போது ஏற்படுத் தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத் தின்கீழ் கங்கை நதியில் வாரணாசி கரையில் முதன்முறையாக துறைமுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் முதலாவது உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து முனையம் ஆகும்.
  3. இலவச Wi-Fi, CCTV கண்காணிப்பு, பொதுத்தகவல் காட்சியமைப்பு & நிறுத்தங்கள் அறிவிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் குடிமக்கள் தோழமைமிகு “மோ பேருந்து” சேவையை அண்மையில் ஒடிசா மாநில அரசாங்கம் புவனேசுவரில் தொடங்கி வைத்துள்ளது.
  4. உத்திரப்பிரதேச அரசு புதிதாக கட்டப்பட்ட இகானா சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரை வைத்துள்ளது.
  5. வங்கக்கடலின் மத்திய வளைகுடாவின் அருகேயும், தென்கிழக்கு பகுதியிலும் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிரமடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது. இதற்கு ‘கஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  6. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் திருமண தகவல் மையமான பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல இந்திய கிரிக் கெட் வீரர் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. சென்னையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 336 நவீன இயந்திரங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.
விளையாட்டு செய்திகள்
  1. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். 2-வதுஇடத்தில் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 871 புள்ளிகளுடன் உள்ளார். 767 புள்ளிகளுடன் ஷிகர் தவண் 7-வது இடத்தில் உள்ளார்.
  2. குவைத்தில் நடந்த 8வது ஆசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் ஸ்கீட் போட்டியில், அங்கத் வீர் சிங் பஜ்வா 60 புள்ளிகளைப் பெற்று உலக சாதனையுடன் தங்கத்தை வென்றுள்ளார்.