Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th November 2018

உலக செய்திகள்
 1. இந்தியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் குற்றவாளிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கை, அமைதிப் பணிகளுக்காக அணு ஆற்றல் துறையில் ஒத்துழைப்பு, இராஜ தந்திர மற்றும் அலுவல் ரீதியான கடவுச் சீட்டுகளுக்கான விசா நடைமுறையில் தளர்வு ஆகிய 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
தேசிய செய்திகள்
 1. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக நோக்கியா நிறுவனத்தின் அனுபவமிக்க செயலதிகாரி ஆசிஷ் சவுத்ரி ((Ashish Chowdhary)) நியமிக்கப்பட்டுள்ளார்.
 2. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு இணையம் மூலம் வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
 3. நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது (ACC – Appointment Committee of the Cabinet) மூன்று மூத்த இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளான “ K. டாஷ், அகிலேஷ் ரஞ்சன் மற்றும் நீனாகுமார்” ஆகியோரை நேர்முக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் (CBDT – Central Board of Direct Taxes) உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
 4. ஒடிசா அரசானது விவசாயிகளால் நீர்ப்பாசனத்தின் சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க “சவுரா ஜல்நிதி திட்டம்” என்பதைத் தொடங்கியுள்ளது.
 5. ஒடிசா மாநில அரசானது 2018 ஆம் ஆண்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 6. தனியார் நிறுவனங்களின் மூலம் சில்லறை வர்த்தக மேலாண்மை மற்றும் புதிய கிளைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகளுக்காக எஸ்.சி. (SC – Scheduled Caste) மற்றும் எஸ்.டி (ST – Scheduled Tribe) சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கர்நாடக சமூக நலத்துறையானது “சம்ரூத்தி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 7. சென்னை மாநகர குடிநீர் வாரியமானது, குடியிருப்புப் பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரை வணிகப் பயன்பாடுகளுக்கு திசை திருப்பப்படுவதைத் தவிரப்பதற்காக ‘ஒற்றை முறை கடவுச்சொல்’ (OTP – One Time Password)முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமானது (SEBI – Securities and Exchange Board of India) தமிழ்நாட்டில் மலிவான வீடுகள் பிரிவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நிதியத்தை துவங்குவதற்கு தமிழக அரசிற்கு அனுமதி அளித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3-D2 ராக்கெட், தகவல் தொடர்புக்கான ஜிசாட் 29 செயற்கைக் கோளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விளையாட்டு செய்திகள்
 1. சீனாவின் ஜினானில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் போட்டியான இறுதி ஆட்டத்தில் சீனாவின் ஜீ ரெட்டியை 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஆசிய ஸ்னூக்கர் பட்டத்தை வென்ற முதலாவது இந்திய வீரராக பங்கஜ் அத்வானி உருவெடுத்துள்ளார்.

No comments:

Post a Comment