Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 15th November 2018

உலக செய்திகள்
  1. இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  2. 33வது ASEAN உச்சிமாநாடு சிங்கப்பூரில் தொடங்கியது. இதில் ASEAN அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூடி பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
  3. பிரான்ஸின் உயரிய குடிமகன்களுக்கான விருதான ‘நைட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ என்ற விருது ஜவஹர் லால் சரீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்திகள்
  1. டெல்லி மாநில அரசானது, உருது கலாச்சாரம் மற்றும் அதன் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் Jashn-e-Virasat-e-Urdu என்ற விழாவை கன்னாட் பிளேசில் உள்ள சென்டல் பூங்காவில் கொண்டாடி வருகிறது.
  2. ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் பதிப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.
  3. 2019 பொதுத் தேர்தலுக்காக பொது விவாதங்கள் மற்றும் குடிமை நிர்வாகப் பணிகளில், பங்களிப்புகளை ஊக்குவித்து இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் #Power of 18 என்ற பிரச்சாரத்தை டிவிட்டர் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
  4. விமானப் பொறியியல் மற்றும் தளவாடங்களின் வளர்ந்து வரும் போக்கு என்ற கருத்தின் மீதான இரண்டு நாள் கருத்தரங்கு (AVIAMAT- 2018) புது டெல்லியில் நடைபெற்றது.
  5. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலுள்ள பீரங்கிப்படை மையத்தில், அமெரிக்காவின் தயாரிப்பான M777 155mm/39 Calibre Ultra Light Howitzer மற்றும் தென் கொரிய தயாரிப்பான K9 VAJRA-T 155mm/53 ஆகிய பீரங்கிகள் இந்திய இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
விளையாட்டு செய்திகள்
  1. உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW) உலக ஆடவர் மல்யுத்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆடவர் 65 கி.கி பிரிவில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  2. சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா விண்கலம் அமைப்புப் பணி 4 ஆண்டுகளில் நிறைவடையும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்திருக்கிறார்.
  3. IIT-ரூர்க்கியின் அறிவியலாளர்கள் புற்றுநோய் செல்களை ஒரே நேரத்தில் கண்டறியவும் அழிக்கவும் கூடிய ஒளிரும் கார்பன் பொருளை உருவாக்கியுள்ளனர்.
முக்கிய தினங்கள்
  1. உலக நீரிழிவு தினம் – நவம்பர் 14