உலக செய்திகள்
- சமுத்திர சக்தி-(கடற்பயிற்சி) – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், கடல்சார் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், இயங்குதிறனை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளை பரிமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இருதரப்பு கடற்படை பயிற்சியான சமுத்திர சக்தியின் முதல் பதிப்பு இந்தோனேசியாவின் சூரபயா துறைமுகத்தில் நடைபெற்றுள்ளது.
- சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்குவா (Xinhua) சமீபத்தில் உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்தி அறிவிப்பாளரை, Wuzhen மாகாணத்தில் நடைபெறும் 5வது உலக இணைய மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
- இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி 2018ம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை பெற்றுள்ளார்.
- இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, யுனிசெப் இந்திய (UNICEF) அமைப்பு இந்திய இளையோரின் தூதராக நியமித்துள்ளது.
- ஐ.நா. அவை ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியான இந்த்ரா – 2018 (Exercise INDRA- 2018), உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாபினா இராணுவ முகாம் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தடலில் (Babina Military Station) நவம்பர் 18 முதல் நடைபெறவுள்ளது.
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது இந்திய காற்று சுழலி சான்றிதழ் திட்டம் (Indian wind Turbine certification scheme- IWTCS) என்ற புதிய திட்டத்தின் வரைவை தயார் செய்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- சூரியனுக்கு அருகில், ‘சூப்பர் பூமி’ ஒன்றை விண்ணியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்திற்கு “பர்நார்ட் நட்சத்திரம் பி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது சூப்பர் பூமி எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (ISRO) ஜி சாட் – 29 (GSAT – 29) என்ற உயர்தர இணைய வசதிக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, அதிக எடையை தாங்கிச் செல்லக் கூடிய ஜி.எஸ்.எல்.வி- மார்க் 3 – டி2 (GSLV – Mark III – D2) என்னும் ராக்கெட் மூலம் நவம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
முக்கிய தினங்கள்
- உலக நுண்ணுயிர் எதிர்பொருள் விழிப்புணர்வு வாரம் – நவம்பர் 12 – நவம்பர்
No comments:
Post a Comment