Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th November 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தின், கொலம்பியா மாவட்ட அப்பீல் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் “நியோமி ராவ்” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  2. சர்வதேச சகிப்புத் தன்மை தினமான நவம்பர் 16 அன்று, சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிக்கும் வகையில், மதன்ஜீத் சிங்க்கு சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிப்பு பரிசு (UNESCO – Madanjeet Singh Prize) வழங்கப்படுகிறது.
தேசிய செய்திகள்
  1. மட்டுவா மற்றும் நாமசூத்ரா சமூகத்திற்கான மேம்பாட்டு வாரியத்தினை அமைக்க மேற்கு வங்காள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  2. அனைத்து வகையான தொழில்களின் சிறப்பு, சேவை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான, இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (IITF – India International Trade Fair) 38வது பதிப்பு புதுடெல்லியில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது.
  3. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது, இணையதளம் மூலமாக மிகப்பெரிய அளவில் திறந்த நிலையிலான நேரடி அல்லது ஆன்லைன் படிப்புகள் உதவியுடன் 5 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு இணையதளத்தில் தொழில்சார் மேம்பாட்டை அளிப்பதற்காக இரண்டு புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  4. 1943ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவையொட்டி 75 ரூபாய் நாணயத்தை வெளியிடப்போவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாள் போட்டியில் சிறந்த அணிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மட்டை வீச்சாளர் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ஐஸ்ப்ரீத் பும்ரா முதலிடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
  1. சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16 (International Day For Tolerance)