Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th November 2018

உலக செய்திகள்
  1. இந்தியா – சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும், 21-வது சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சீனாவின் துஜங்யான் நகரில் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
  1. கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், டிஜிட்டல் மயமாக்கும் முதன்மை முயற்சியாக, ஆசிரியர் பயிற்சியை இணையம் மூலம் பெறும் வகையில் “கூல்” என பெயரிடப்பட்டு உள்ள, திறந்த நிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
  2. மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் 24-வது தலைமை நீதிபதியாக “நீதிபதி சஞ்சய் குமார் சேத்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  3. 2018 ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர் விருது” டாக்டர் மார்த்தா ஃபரெல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  4. இளைஞர்களை கூட்டுறவு வணிக முயற்சிகளுக்கு ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC – National Cooperative Development Corporation) “யுவ சஹாகர்” (Yuva Sahakar) என்ற கூட்டுறவு தொழில் நிறுவன ஆதரவு மற்றும் புத்;தாக்கத் திட்டத்தினை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  5. புற்றுநோய் ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்ந்து ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து (UK) நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  6. 2019 ஆம் ஆண்டின் இந்தியக் குடியரசு தினவிழா அணி வகுப்பில் “தலைமை விருந்தினராக (Chief Guest at the 2019 Republic Day Parade of India) தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் “சிரில் ராமபோசர்” பங்கேற்க உள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. சாலை போக்குவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உலக தினம் நவம்பர் 18 (World Day of Remembrance for Road Traffic Victims)