Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 25th November 2018

உலக செய்திகள்
  1. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே தொடர வேண்டிய உறவு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  2. உலகளாவிய இணையதள அமைப்பான ICANN என்ற அமைப்பால் ஆதரிக்கப்படும் UASG (Universal Acceptance Steering Group) என்ற அமைப்பானது ராஜஸ்தானின் முதல்வர் வசுந்ரா ராஜே-வுக்கு ‘உலகளவில் ஏற்புடைய சிந்தனைத் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.
  3. சர்வதேச காவல் துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த “சிம் ஜோங் யாங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  4. பிரிட்டிஷ் நடிகை மில்லி பாபி பிரவுன் (வயது 14) மிக இளம் வயதில் யுனிசெப் (UNICEF) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். (Youngest – ever UNICEF Good will Ambassador).
தேசிய செய்திகள்
  1. இந்தியா – ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முதலீட்டை அதிகரித்தல், வர்த்தகங்களை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சாரங்களைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக, இந்தியா – ஜப்பான் வர்த்தக குழுவின் 2 நாள் அளவிலான முதல் “கொன்னிச்சி வா புனே திருவிழா” மகாராஷ்டிராவின் புனேவில் நடத்தப்பட்டது.
  2. இந்தியாவின் முதலாவது திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகமான ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  3. குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு (கியாஸ்) வினியோகத் திட்டத்தின் 9வது சுற்று ஏலத்தின் கீழ் 129 மாவட்டங்களில் உள்ள நகரங்களில் குழாய்கள் மூலம் வீட்டு சமையல் அறைகளுக்கே சமையல் கியாஸ் வினியோகம் செய்வதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.