Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 26th November 2018

உலக செய்திகள்
  1. ஆசியா – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான (APEC – Asia-Pacific Economic Cooperation) ஆசியா – பசிபிக் பொருளாதாரக் கூட்டிணைவின் 2018ஆம் ஆண்டிற்கான உச்சி மாநாடானது சமீபத்தில் பப்புவா நியூகினியாவின் போர்ட் மோர்ஸ்பியில் நடத்தப்பட்டது.
தேசிய செய்திகள்
  1. லடாக்கின் ஹென்லியில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள, நோவா வெடிப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் தொடர்ச்சியான, 0.7 மீட்டர் அளவுடைய GROWTH – India தொலைநோக்கியானது முதன்முறையாக தனது கண்டுபிடிப்பை பதிவு செய்துள்ளது.
  2. இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான ஜலால் ஸ்ரீவஸ்தவா இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (Inland Waterways Authority of India – IWAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. புதுடெல்லியில் டாக்டர் இராஜேஷ் பட் என்பவரால் எழுதப்பட்ட : “காஷ்மீர் வானொலி – அமைதி மற்றும் போர் காலங்களில்” என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிந்தேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
  4. சகோதரத்துவம், பன்முகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இந்தியாவின் முதலாவது “தேசிய மத நல்லிணக்க நிறுவனத்தை” இந்திய அரசு அமைக்க உள்ளது.
  5. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சிறப்பு படைகளுக்கு இடையேயான “வஜ்ரா பிரகார்” என்னும் 2018-ம் ஆண்டின் சிறப்பு பயிற்சியானது, இராஜஸ்தானின் பிகானிரில் உள்ள மகாஜன் ஆயுதப்படை தளத்தில் தொடங்கியுள்ளது.
  6. காவல்துறை தகவல் தொடர்புகளை நவீனப்படுத்துவதற்கான, அனைத்து இந்திய காவல்துறை தலைவர்களின் தகவல் தொடர்பு மாநாடானது புதுடெல்லியில் நடைபெற்றது.