Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 28th November 2018

உலக செய்திகள்
 1. இந்தியா - மியான்மர் எல்லையில் சிறிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.25 மில்லியன் டாலர் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் டாலர் என பிரித்து மியான்மருக்கு இந்தியா நிதி அளித்துள்ளது
 2. பிஜியில் நடைபெற்ற 2018ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பிஜி முதல் கட்சி வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் “வோரெக் பயினிமராமா” இரண்டாவது முறையாக பிஜி நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
 1. மத்தியப் பிரதேசம் ஜான்சியில் இந்திய - ரஷ்யப் படையினர் கூட்டாகப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 2. பனராஸ் இந்து கல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக நீதிபதி கிரிதர் மால்வியா நியமிக்கப்பட்டுள்ளார்
 3. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வடகிழக்குப் பிராந்தியத்தின் சுற்றுலாத் திறனை சிறப்பித்துக் காட்டும் நோக்கத்துடன், திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் சர்வதேச சுற்றுலா மையத்தின் வருடாந்திர நிகழ்ச்சியின் 7வது பதிப்பு நடைபெற்றது.
 4. இந்திய விமான நிலைய ஆணையமானது (AAI – Airports Authority of India) குறைந்த கட்டணமுடைய விமானசேவை நிறுவனமான ஏர் ஒடிசாவின் உடான் (UDAN – Ude Desh Ka Aam Nagrik) உரிமத்தை அதன் ஒழுங்கற்ற விமான சேவையின் காரணமாக 7 விமான நிலையங்களுக்கு ரத்து செய்துள்ளது.
 5. பல்வேறு வடிவங்களில் புகையிலை பயன்படுத்துவதைத் தடை செய்யவும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, பஞ்சாப் மாநில அரசு, குட்கா விற்பனை செய்யும் இடங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
 6. இரயில் பயணிகள், எளிதில் அரசு இரயில்வே காவல்துறை (Government Railway Police), இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force) ஆகியோரின் உதவியைப் பெறுவதற்காக,“GRP (Government Railway Police)” என்னும் உதவி செயலியை இரயில்வே துறை ADGP சைலேந்திர பாபு கோயம்புத்தூர் இரயில்வே சந்திப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 7. காசநோயை அழிக்கும் விதமாகவும், அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாக, டிபி மித்ரா (காசநோயாளிகளின் நண்பன்) என்னும் புதிய செயலியை, ஒடிசா மாநில சுகாதாரத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. 48 கோடி கி.மீ., 7 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ரோபோ இன்சைட் விண்கலம்
விளையாட்டு செய்திகள்
 1. ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் கேகிஸோ ரபாடா முதலிடம் வகிக்கிறார்.
 2. ஜெர்மனியின் காட்பஸ் நகரில் நடைபெற்ற ஆர்ட்ஸ்டிக் லைஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இரங்கல்
 1. உலகப் புகழ் பெற்ற இத்தாலிய இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலூசியின் (Bernardo Bertolucci) காலமானார்