Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 2nd November 2018

உலக செய்திகள்
  1. அயர்லாந்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில், 56 சதவீதம் வாக்குகளைப் பெற்று மைக்கேல் டி ஹக்கின்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. சுகாதாரத்தில் காந்திய சித்தாந்தத்தையும் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ‘காந்திய சிந்தனைகள் மற்றும் சுகாதாரம் (Gandhian Thoughts and Sanitation) என்னும் கருத்தரங்கு மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
  2. புது டெல்லியின் DRDO பவனில், இணையவழியில் புத்தாக்கம் (Cyber Innovation), இணையப் பாதுகாப்பு (Cyber Security), சவால்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மீதான ஒரு நாள் மாநாடானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO – Defence Research and Development organisation) தலைமையில் நடைபெற்றுள்ளது.
  3. சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், இளைய தலைமுறையினர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இளம் புத்தாக்குநர் திட்டம் 2018 (YIP – Young Innovators Programme) எனும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப போட்டியானது, IIT – கரக்பூர் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. எகிப்தின் ஷாரம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் 2018ம் எகிப்து இளையோர் & சிறுவர் ஓபன் மேசை பந்தாட்டப் போட்டித் தொடரில், மினிகேடட் சிறுவர் ஒற்றையர் பட்டத்தை, இந்தியாவின் விஷால் ராஜ்வீர் ஷா, எகிப்தின் முஸ்தாபாவை தோற்கடித்து வென்றுள்ளார்.
  2. ஓமனின் மஸ்கட் நகரத்தில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பின்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக இணைந்து வெற்றி பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் டிவிட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் உலவும் போலியான தகவல்களை கண்காணிக்க வலைதளம் அடிப்படையிலான கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
வர்த்தக செய்திகள்
  1. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 2022ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக FAIDF (Fisheries and Aquaculture Infrastructure Development Fund) மீன்பிடித் துறை மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற நிதியை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  2. தேர்தல் நிதிப் பத்திரங்களை வழங்குவதற்கும் அப்பத்திரங்களை ரொக்கமாக மாற்றுவதற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) அங்கீகாரம் அளித்து மத்திய அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
Post a Comment