Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 30th November 2018

உலக செய்திகள்
  1. தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சார்க் உச்சி மாநாடு 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
  2. ஈஸிபோன் பிராண்ட் கைபேசி தயாரிப்பு நிறுவனமான இநோவஸ் (enovus) என்ற நிறுவனமானது குழந்தைகள் பாதுகாப்பாகவும், பெற்றோருடன் இணைப்பில் இருக்கும் வகையில் இந்தியாவின் குழந்தைகளுக்கான முதல் கைபேசியான “ஈஸிபோன் ஸ்டார்” என்ற கைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் (NSDC) தலைவராக திரு ஏ எம் நாயக் (Anil Manibhai Naik) என்பவரை நியமித்துள்ளது.
  3. இந்திய பொறியாளர் மையம் – குவைத் கிளையின் சார்பில் குவைத் நகரில் நடைபெற்ற 51-வது பொறியாளர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குநரும், விண்வெளி விஞ்ஞானியுமான ‘மயில்சாமி அண்ணாதுரை”க்கு “செவ்வாய் மனிதன்” என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. தமிழ்நாட்டை சேர்ந்த டாஃபே நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த ஐஎஸ்இகேஐ அண்ட் கோ-வுடன் விவசாயத் துக்குத் தேவையான கருவிகளை உருவாக்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நார்வே வீரர் கார்ல்சென், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.
  2. இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டின் செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் ஃபயியானோ கருணா-வை வென்று நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.