Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 5th November 2018

உலக செய்திகள்
 1. இங்கிலாந்தில் உள்ள மேற்கு மிட்லாண்ட்ஸ் அருகே உள்ள ஸ்மெத்விக் என்னும் ஊரில் முதலாம் உலகப் போரில் போரிட்ட இந்திய வீரர்களின் நினைவாக சீக்கிய வீரரின் தோற்றத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 2. சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 3. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்துள்ளார். இதில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வனம், பூமி, அறிவியல், விவசாயம், தொழில் உள்ளிட்ட 16 துறைகளில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்திய செய்திகள்
 1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் நிறைவு பெற்றது
 2. உத்தரபிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், முதன்முறையாக தமிழக மாணவர் கவுதம்.கே நிர்வாகக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
 3. சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
 4. நாட்டில் முதல் முறையாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு படகு பயணத்தை கங்கை நதியில் கப்பல் துறை செயலர் கோபால கிருஷ்ணா மற்றும் பெப்சிகோ நிறுவன உயரதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி உள்ளனர்.
 5. 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று இராணுவத்தின் விமானப்படை தனது 33வது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது. இதனைக் குறிப்பிடும் விதமாக புதுடெல்லியில் இந்தியா கேட் அருகே அமர் ஜவான் ஜோதி என்ற இடத்தில் மலர்வளையம் வைக்கும் விழா நடத்தப்பட்டது.
 6. இந்தியாவில் முதன்முறையாக முனனெச்சரிக்கை தகவல் பரப்பு மையத்தை ஒடிஷா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
 7. இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராணுவங்கள் இந்தியாவின் மிசோரோமில் உள்ள வையிரங்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்புப் போர் பள்ளியில் தர்ம கார்டியன் – 2018 (Dharma Guardian) என்ற முதலாவது இராணுவக் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
 8. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலியான ‘aNEETa’ என்ற செயலியை தமிழக மாணவி இனியாள் என்பவர் டெல்லியில் கண்டுபிடித்துள்ளார்.
 9. கேரள மாநில அரசின் முதன்மை இலக்கியப் பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் என்ற விருதின் 2018ம் ஆண்டுக்கான எழுத்தாளராக எம். முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
 1. 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்முலா ஒன் பந்தயத்தை வியட்நாம் நடத்த உள்ளது. பார்முலா ஒன் பந்தயத்தை நடத்த உள்ள மூன்றாவது தென்கிழக்காசிய நாடாக வியட்நாம் உருவெடுத்துள்ளது.
 2. சி.கே. நாயுடு கோப்பை கிரிக் கெட்டில் புதுச்சேரி சுழல்பந்து வீரர் சிதாக் சிங் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர் தற்போது புதுச்சேரி அணிக்காக விளையாடி இச்சாதனையை படைத்துள்ளார்.
இரங்கல்
 1. 1971-ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பலை அழித்த நடவடிக்கையில் முன்னின்று செயல்பட்ட வைஸ் அட்மிரல் எம்.பி.அவாதி காலமானார்.