Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 7th November 2018

உலக செய்திகள்
  1. பீகார் மாநிலத்தில் உள்ள பத்னாஹா என்னுமிடத்திலிருந்து நேபாளம் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில்நகரமான பிரட்நகரை இணைக்கும் வகையில் 1 கி.மீ. தூரத்திற்கு இந்தியாவின் சார்பில் புதிய இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  2. இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக, ரோஸ் எட்கிலே (Rose Edgley) என்பவர், கென்டிஷ் என்ற இடத்தில் இருந்து சுமார் 3200 கி.மீ. தூரத்தை 157 நாட்கள் நீந்தி மார்க்கேட் என்னுமிடத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
  3. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அதன் முக்கிய பொறுப்பில் சில மாற்றங்கள் செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, புதிய தலைமை வழக்கறிஞராக மேத்யூ ஜி விடாகெர் என்பவர் நியமிக்கப்பட உள்ளார்.
இந்திய செய்திகள்
  1. உலக மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமை மற்றும் நிதித்துறை செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்கான, நிதியியல் நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Financial Stability and Development Council – FSPC) 19வது சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது.
  2. நிதி ஆயோக்கும், சீன மக்கள் குடியரசினைச் சேர்ந்த அரசு சபையின் வளர்ச்சி ஆராய்ச்சி மையத்திற்கும் இடையேயான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை மும்பையில் நடைபெற்றது.
  3. கேரள மாநில அரசானது முதல் முறையாக, அதிவேக படகை ஆற்றுவழி போக்குவரத்தில், எர்ணாகுளம் – கோட்டயம் – ஆலப்புழா இடையே இயக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. கடலுக்குள் இருந்து ஏவுகணை செலுத்தும் திறன் படைத்த நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் – அரிஹந்த் (INS – Arihant) முழுமையான செயல்பாட்டுடன் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலுக்குள் எந்தப் பகுதியிலிருந்தும் ஏவுகணையை செலுத்த முடியும்.
முக்கிய தினங்கள்
  1. நவம்பர் 5 – உலக சுனாமி விழிப்புணர்வு தினம்
Post a Comment