Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 10th December 2018

உலக செய்திகள்
  1. முன்னாள் மூத்த இந்திய அரசுத் தூதரான “பிரீத்தி சரண்” ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சமூக பொருளாதார கலாச்சார உரிமைக் குழுவிற்கு (CESCR – Committee On Economic, Social and Cultural Rights) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கூட்டமைப்பு ஒப்பந்தத்தின் உறுப்பினர் நாடுகளின் 24-வது மாநாடு (COP-24), போலாந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடைபெற்றது.
  3. சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற 68-வது உலக அழகி போட்டியில் மெக்சிகோவின் “வனிசா போன்ஸ் டி லியோன்” 2018 – ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்.
  2. 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க இளையோர் உயிர்தொழில்நுட்பவியலாளர் விருது ஐஐடி-மாண்டியின் துணைப் பேராசிரியரான “டாக்டர். ராஜானிஸ் கிரி” என்பவருக்கு வழங்கப்படுகிறது. (IYBA – Innovative Young Bio-technologist Award)
  3. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பை 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  4. உணவு விநியோகத்தில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மாறுபக்க கொழுப்பை (trans-Fat) ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) “Heart Attack Rewind” என்ற ஊடகப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  5. இந்திய கடற்படையானது தனது முதன்மை கடலோரப் பகுதி பாதுகாப்பு பயிற்சியான ட்ரோபெக்ஸ்-2019 (TROPEX – Theatre Level Operational Readiness Exercise) எனும் பயிற்சியை 2019 ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை நடத்த உள்ளது.
  6. முதல் இந்தியா – ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FCCI) சார்பில் நடத்தப்பட்டது.
  7. பெண்களின் பாதுகாப்புக்கான 181 என்ற புதிய இலவச தொலைபேசி எண் சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
விளையாட்டு செய்திகள்
  1. கால்பந்து விளையாட்டின் பெருமைமிக்க விருதான “பால் ஆன் டி ஆர்” (Ballon D’or) – 2018 விருதினை குரோஷியாவின் “லூகா மாட்ரிக் பெற்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்