Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 11th December 2018

உலக செய்திகள்
  1. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மின்காந்த ரயிலை சீனா வடிவமைத்துள்ளது.
  2. சீனாவின் “பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பில்” (Belt and Road Initiative – BRI) இணைந்துள்ள முதல் மத்திய அமெரிக்க நாடு எனும் பெயரை “பனாமா” நாடு பெற்றுள்ளது.
  3. வங்கிக்கடன் திவால் நெறிமுறைகள் தொடர்பான மாநாடு (Insolvency and Bankruptcy code of India – New paradigm for stressed Assets) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
  1. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்ததாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. கேரள மாநிலத்தின் கண்ணணூரில் புதியதாக அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் 4 விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.
  3. இந்திய விமானப்படை (IAF – Indian Air Force) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு விமானப்படை ஆகியவற்றிற்கிடையேயான “AVIAINDRA – 2018” என்ற கூட்டு விமானப்படை பயிற்சி இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.
  4. நீர் முகாமைத்துவத்திற்கான நிலையான கொள்கைகளை மேம்படுத்துவதற்காக, சர்வதேச அளவிலான முதல் “நிலையான நீர் மேலாண்மை” மாநாடு பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் நடைபெற்றது.
  5. யூனியன் பிரதேசங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் அருங்காட்சியகம் புதுச்சேரி கடற்கரையிலிருந்து அமைய உள்ளது.
  6. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து பெயர்பெற்ற பொருளியல் வல்லுநர் சுர்ஜித் பல்லா விலகியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நிலவில் பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான, சீனாவின் “சாங் இ -4” (chang’e -4) என்னும் திட்டத்தின் மூலம் சீனாவானது ரோவர் என்னும் விண்கலத்தை “லாக் மார்க் – 3B” என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மூத்த குடிமக்களின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டி வருவாய்க்கு வரி இல்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
  2. சீனாவின் பய்ஜிங்-ஐ தலைமையகமாகக் கொண்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது, ஆந்திர பிரதேசத்தின் நீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக சுமார் 400 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்க உள்ளது.