Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th December 2018

உலக செய்திகள்
  1. நிதி நடவடிக்கைக்கான சர்வதேச அமைப்பில் (Financial Action Task Force – FATF) 38வது உறுப்பினராக இஸ்ரேல் இணைந்துள்ளது.
  2. மிசோரம் முதலமைச்சராக ஜோரம்தாங்கா பதவியேற்க்கவுள்ளார்
தேசிய செய்திகள்
  1. தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்றுக்கொண்டார்.
  2. 2018ஆம் ஆண்டு அதிக முறை கூகுளில் தேடப்பட்ட பிரபலங்களில் முதல் இடம் பிடித்தார் பிரியா பிரகாஷ் வாரியர்
  3. வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத் தூதுவராக, 7 வயது சிறுமி “ஹனிஃபா ஜாரா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. தேசிய கால்நடைகள் திட்டத்தின் கீழ், (National Livestock Mission) மத்திய அரசின் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு திட்டங்களுக்கான மானியங்களை நேரடியாக பயனர்கள் வங்கி கணக்கில், செலுத்துவதற்காக “ENSURE” என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
  5. குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்;துவதற்காக, “டிஜிட்டல் சகாப்தத்தில் குழந்தைகள் மீது பாலியல் சுரண்டல்” (Sexual Exploitation of Children in Digital Era”) என்று முதல் சர்வதேச மாநாடு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
  6. “விவசாயத்துறையில் தொழில்நுட்பம்: விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்துதல்” என்பதை கருத்துருவாக (Theme) கொண்டு, இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பின் (CII – Confederation of Indian Industry) வேளாண் தொழில்நுட்ப இந்தியாவின் (CII Agro Tech India – 2018) 13வது பதிப்பு சண்டிகரில் நடைபெற்றது.
  7. நாகலாந்து மாநில அரசானது அம்மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் “சுற்றுலா காவல் துறை” என்னும் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
  8. இந்தியாவிலேயே முதன்முறையாக “முதியோர் தடுப்பூசி திட்டம்” தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. மனச்சிதைவு நோயை குணப்படுத்தும் நவீன மருந்தை ரஷிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  2. இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக, இஸ்ரோவானது ஜி சாட் 7A (GSAT – 7A) என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளை, ஜிஎஸ்எல்வி – F11 என்ற இராக்கெட் மூலம் டிசம்பர் 19 அன்று விண்ணில் செலுத்த உள்ளது.

No comments:

Post a Comment