Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th December 2018

உலக செய்திகள்
  1. ஸ்லோவேனியா அரசானது தனது இராணுவப் படையின் தலைவராக, பெண் அதிகாரியான, மேஜர் ஜெனரல் “அலென்கா எர்மென்கை” நியமித்துள்ளது.
  2. மரபியல் சார்ந்த விதைகளின் பயன்பாடுகளை மியான்மரில் உள்ள விவசாயிகளுக்கு தெரியப்படுத்த மற்றும் அந்நாட்டு விவசாயிகளின் திறன் மேம்பாட்டுக்காக, இந்தியா சார்பில் வேளான் ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டு மையம் – (ACARE – Advanced Center For Agriculture Research & Education) என்ற உதவித் திட்ட மையத்தை தொடங்கியுள்ளது.
  3. ஐக்கிய நாடுகளின் கணக்காளர் குழுவின் (UN panel of Auditor) துணைத் தலைவராக இந்தியாவின் தலைமை கணக்காளராக (CAG) உள்ள ராஜிவ் மெஹிரிஷி (Rajiv Mehrishi) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. ராஜஸ்தான் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அஷோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
  2. 2018 ஆம் ஆண்டின் சர்வதேச கீதைத் திருவிழாவானது ஹரியானாவின் குருஷேத்திரத்தில் நடத்தப்பட்டது
  3. இந்திய கடலோரக் காவல் படையானது போர்ட் பிளேர் கடற்பகுதியில் “சுத்தமான கடல் – 2018” என்ற பெயர் கொண்ட பிராந்திய அளவிலான கடல்சார் எண்ணெய் மாசுக் கட்டுப்பாடு எதிர்வினைப் பயிற்சியை நடத்த உள்ளது.
  4. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் “தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம்” என்ற புதிய சரக்கு கப்பல் சேவையை தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து தொடங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. இந்தியாவின் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.