Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th December 2018

உலக செய்திகள்
  1. 2018-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக(மிஸ் யுனிவர்ஸ்) பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
  2. ரஷ்யாவைச் சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையமான அகதெமிக் லாமோனோசாவ் (Akademik Lomonosov) – ஐ உருவாக்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. புது டெல்லியில், மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் ‘நீர் மேலாண்மையில் திறமை மிகு அலகு’ என்ற சிறப்பு விருதானது, “புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு வழங்கப்பட்டது.
  2. இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII – Film and Television Institute of India) தலைவராக “பிரிஜேந்திர பால் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. டெல்லி உயர்நீதி மன்றமானது, இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை தடை செய்துள்ளது.
  4. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயலுக்கு “பெய்ட்டி” என தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது.
  5. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன் ராஜேஷ் 13 வயதில் ‘டிரைநெட் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் மிக குறைந்த வயதில் சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பித்த பெருமையை பெற்றுள்ளார்.
  6. இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. தரவு மேலாண்மை மற்றும் தொலை தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவானது “இந்திய தரவு ரிலே சேட்டிலைட் சிஸ்டம்” (IDRSS – Indian Data Relay Satellite System) என்னும் விண்வெளிப் பயணத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. பேட்மிண்டன் உலக டூர் பைனல்சில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
  2. ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரத்தில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
  3. சீனாவில் நடைபெற்ற உலக டூர்ஃபைனல்ஸ் பாட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பானின் நிஜோமி ஒகுஹராவை வென்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. டிசம்பர்16 - வங்காள தேச போர் வெற்றி தினம் (vijay Diwas)

No comments:

Post a Comment