Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th December 2018

உலக செய்திகள்
  1. உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே பத்திரிக்கையாளருக்கு மிக ஆபத்தான நாடு என்ற பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது.
  2. பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
  3. சீனாவின் செங்டூவில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் “Hand – in – Hand” என்ற கூட்டு இராணுவப்பயிற்சியை தொடங்கியுள்ளன.
தேசிய செய்திகள்
  1. 2018 -ம் ஆண்டு உலகிலேயே தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.மேலும் பிரேசில் முதலிடத்தை பெற்றுள்ளது
  2. இந்திய காவல் பணி அதிகாரியான ராம்பால் பவார் தேசிய குற்ற ஆவண அமைப்பின் (National Crime Records Bureau – NCRB) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. மக்களவைச் செயலகத்தின் அசோக் குமார் தேசிய பழங்குடியினருக்கான ஆணையத்தின் (National Commission for Scheduled Tribes – NCST) செயலராக பொறுப்பேற்றுள்ளார்.
  4. இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, SWIFT இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தில் இந்தியாவின் 2வது மிகப்பெரிய கொள்கலன் சரக்குப் பிரிவு கொல்கத்தா – பாட்னா ஆகும். இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் கப்பலான ‘‘MV RN தாகூர்’, கங்கையாற்றில் உள்ள (தேசிய நீர்வழி – 1) பாட்னாவின் கெய்காத் IWT முனையத்தை அடையும் முதல் சரக்குக் கப்பலாகும்.
  6. ஆளுநர் சத்யபால் மாலிக்கால் தலைமை தாங்கப்படும் ஜம்மு & காஷ்மீரின் மாநில நிர்வாகக் குழுவானது பணியிடங்களில் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்க சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
  7. புதுடெல்லியில் பங்குதாரர்களின் கருத்தரங்கின் 4வது பதிப்பானது பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது.
  8. ‘லோக்மாத்’ எனும் செய்தித்தாளால், 2018ம் ஆண்டுக்கான ‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக’ திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  9. ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிசாட் 7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
வர்த்தக செய்திகள்
  1. இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் வோகோ நிறுவனத்தில் 710 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஓலா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. தேசிய கூடைப்பந்து மன்ற சாம்பியனான தங்க மாநில போர்வீரர்கள் அணியானது, 2018ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  2. இம்பாலில் நடந்த விழாவில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை MC மேரி கோமுக்கு, மணிப்பூர் மாநில அரசாங்கம் ‘மீதோயிலெய்மா’ (ராணிக்கு இணையானவர்) பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
  3. அண்டார்க்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் போலந்து நாட்டின் பியோடர் சுசென்னாவும், பெண்கள் பிரிவில் ரோமா புய்செனாவும் முதலிடம் பெற்றனர். மற்றும் இந்திய வீராங்கனை குர்மித் சோனி பலா 3ம் இடத்தைப் பிடித்தார்.

No comments:

Post a Comment