Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 21st December 2018

உலக செய்திகள்
  1. மெரியம் வெப்ஸ்டர் (Merriam – Webster) என்ற அகராதியானது 2018ம் ஆண்டிற்கான வார்த்தையாக “நீதி” (Justice) எனும் வார்த்தையை அறிவித்துள்ளது.
  2. அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ஃபோர்ட்ஸ் சிட்டியில் நடைபெற்ற, 2018 உலகளாவிய இந்திய அழகிக்கான (Miss India World Wide – 2018) போட்டியில் இந்திய – அமெரிக்கர் “ஸ்ரீ சைனி” வெற்றி பெற்றார் .
தேசிய செய்திகள்
  1. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (Additional Solicitor General – ASG) வழக்குரைஞர் “மாதவி கோரதியா திவானை” மத்திய அரசு நியமித்துள்ளது.
  2. பணியிடங்களில் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்கும் சட்டத்தை ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இயற்றியுள்ளது. மேலும் மாநில நிர்வாகமானது “ரன்பீர் தண்டனைச் சட்டத்தை (RPC – Ranbir Penal Code) திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  3. இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த G SAT – 7A என்ற செயற்கைகோள் GSLV – F11 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் டிசம்பர் 19 அன்று, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அமெரிக்காவின் பூர்வீக தொல்லியல் தளத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தாவர வைரஸ் வகையைச் சேர்ந்த “ஜீயோ மே க்ரைசோவைரஸ்” (Zea May Chryso Virus 1 – ZMCVI) எனப் பெயரிடப்பட்ட வைரஸை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் V. ராமன் (W.V. Raman) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment