Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 23rd December 2018

உலக செய்திகள்
  1. ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளின்படி உலகிலேயே முதன் முதலாக குழந்தைகளுக்கு ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தடுப்பூசிகளை வழங்கும் முதல் நாடாக வனுவாட்டு (Vanuatu) ஆகியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது “பிரணாப் குமார் தாஸை” மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரிக்கான வாரியத்தின் (CBIC – Central Board of Indirect Taxes and Customs) தலைவராக நியமித்துள்ளது.
  2. இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் நிறுவனமான தேசிய புற்றுநோய் நிறுவனமானது (NCI – National Cancer Institute – NCI) ஹரியானாவின் ஜஜ்ஜாரில் தொடங்கப்பட்டுள்ளது.
  3. இந்தியாவின் பொருளாதாரமானது 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவதற்காக கட்டாயமாக எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றிய, நியூ இந்தியா @ 75 என்ற யுக்திசார் ஆவணத்தை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
  4. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2018ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் இராஜஸ்தான் மாநிலத்தின் “கலு காவல் நிலையம்” முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் – 2 விண்கலத்தை 2019 ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  2. ஹரியானா மாநிலத்தின் கல்வித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அம்மாநில அரசு “சிக்ஷ சேது” (Shiksha Setu) என்னும் கைப்பேசி செயலியை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள பெண்களுக்கான சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி. சிந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேலும் தாய் ஜீ யாங் முதல் இடத்தையும் நஜோமி ஒகுஹரா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

1 comment: