Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 24th December 2018

உலக செய்திகள்
  1. எதிரி நாட்டினை உளவு பார்க்கவும், குண்டு வீசவும் மேம்பட்ட உளவு விமானத்தை சீனா தயாரித்துள்ளது. விங் லூங் ஐ டி ((Wing Loong I D)) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் சுமார் 45 அடி நீளம் கொண்டது.
தேசிய செய்திகள்
  1. ஒடிஷா மாநிலத்தில் விவசாயிகளின் மேம்பாட்டுக்காக “KALIA” என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. (KALIA – Krushak Assistance for livelihood and Income Augmentation)
  2. சமீபத்தில் காலமான, தமிழ் மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களது வரலாற்று புதினமான “வானம் வசப்படும்” என்ற நாவல் 1995 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. விண்வெளி அடிப்படையிலான இணைய வசதி அளிக்கும் முதல் செயற்கை கோளான “ஹன்ஜியின்”(Hongyun)ஐ சீனாவானது, லாங் மார்ச் 11 இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  2. விமானப் போக்குவரத்து அமைச்சகமானது இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து “கேஸ் 2019” (GAS 2019) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. 31-வது GST கவுன்சில் கூட்டம் அருண்ஜெட்லி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 பொருட்களுக்கு GST வரி குறைக்கப்பட்டது.
  2. “ A Rural Manifesto Realizing India’ s Future through her villages” என்ற புத்தகத்தை “வருண் காந்தி” என்பவர் எழுதியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. FIFA உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 97வது இடத்தில் நீடிக்கிறது. ஆசிய அளவில் இந்திய அணி 15வது இடத்தில் உள்ளது.
இரங்கல்
  1. மெக்சிகோவின் புயெப்லா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்ற மார்தா எரிக்கா அலோன்சோ ((Martha Erika Alonso)), ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.