Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 29 December 2018

உலக செய்திகள்
  1. கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் 600 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட “எஸ் – 400” என்ற ஏவுகணையை சீனாவானது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையேயான, முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டமானது, ஈரானின் துறைமுக நகரமான சபாஹரில் நடைபெற்றது.
  2. மறைந்த இசையமைப்பாளரான, லட்சுமிகாந்த் சாந்தாராம் குதல்கர் மற்றும் பின்னணி பாடகர் உஷா தீமோத்தேயு ஆகியோருக்கு, முகமது ரஃபி விருது வழங்கப்பட்டது.
  3. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா, அஞ்சல் துறையின் மின்னணு வர்த்தக தளத்தினை தொடங்கி வைத்தார்.
  4. 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாடு ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருள் (Theme) – “Science, Technology and Innovations for it clean, green and Health Nation” என்பதாகும்.
  5. புதுடெல்லியில் நடைபெற்ற திருமதி இந்தியா – 2018 (Mrs. India – 2018) போட்டியில் மத்திய பிரதேச மாநிலத்தின் “திவ்யா பட்டிதார் ஜோஷி” முதலிடம் பிடித்து, திருமதி இந்தியா – 2018 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு, 2018ஆம் ஆண்டுக்கான, தங்கப் பதக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
  2. நடப்பு ஆண்டில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில், முதல் முறையாக சீனாவை, இந்தியா முந்தி உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. விண்வெளிக்கு 3 வீரர்களை அனுப்பும் இஸ்ரோவின், ‘ககன்யான்’ திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  2. இரயில் பெட்டிகளில் மனிதனால் செல்ல இயலாத இடத்தை சோதனை செய்து புகைப்படம் எடுப்பதற்காக, இரயில்வே துறையானது “உஸ்தாத்” (USTAAD)” என்ற ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. (USTAAD – Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid).
விளையாட்டு செய்திகள்
  1. கோல்ப் விளையாட்டில் ஆசிய டூர் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது (Asian Tour Order of Merit in golf) பெற்ற, இளம்வீரர் மற்றும் 5-வது இந்தியராக, சுபாங்கர் ஷர்மா ஆகியுள்ளார்.