Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 2nd December 2018

உலக செய்திகள்
 1. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சகந்த் என்ற போர் கப்பலை ஈரான் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
 2. இந்தியா – அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான விமானப்படை பயிற்சியான “COP India – 2018” இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கலைகுண்டா விமான நிலையத்தில் நடைபெற உள்ளது.
 3. BFR (Big Falcon Rocket) – இராக்கெட்டின் பெயரை “ஸ்டார் ஷிப்” என மாற்றுவதாக ஸ்பேஸ் X நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான “எலன் மஸ்க்” என்பவர் அறிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
 1. 2022ஆம் ஆண்டு ஜி 20மாநாட்டை இந்தியா நடத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 2. இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபர் சிரில் ராமபோஸா கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
 3. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
 4. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷண் சமிதி போன்ற அமைப்புகள் யுனெஸ்கோவுடன் (UNESCO) இணைந்து, 3 நாள் “தென் ஆசிய பிராந்திய இளைஞர் சமாதான மாநாட்டை (South Asia Regional Youth Peace Conference) “புதுடெல்லியில்” நடத்த உள்ளது.
 5. கல்வி பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவின் ஐ.ஐ.டி – கரக்பூர் (IIT – kharagpur) மற்றும் ஆலாந்த் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தாகியுள்ளது.
 6. நாகலாந்தின் வளமான கலாச்சாரம் மற்றும் கைத்தொழில்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கான, 19-வது “ஹாரன்பில்” திருவிழா நாகலாந்து மாநில தலைவர் ஹோகிமா அருகில் உள்ள கிஸ்மா கிராமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார்.
 7. “சௌபாக்யா – பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ், நாட்டில் மத்திய பிரதேசம், திரிபுரா, பீகார், ஜம்மு & காஷ்மீர், மிசோரம், சிக்கிம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்கள் 100 சதவிகிதம் மின்சார இணைப்பை பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. வான்வெளி பாதுகாப்பிற்கான நவீன ஏவுகணைகளை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
 2. 20 – 30 வினாடிகளுக்குள் முழு மனித உடலையும் ஸ்கேன் செய்து முப்பரிமாண படத்தை பிடிக்கக்கூடிய உலகின் முதலாவது மருத்துவ படவியல் ஸ்கேனர், அமெரிக்காவின் டேவிஸ்-ல் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஷாங்காய் – ஐ அடிப்படையாக கொண்ட யுனைடைட் இமேஜிங் ஹெல்த்கேர் (UIH) ஆகியோரின் கூட்டிணைவால் உருவாக்கப்பட்டது.
வர்த்தக செய்திகள்
 1. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்க ராணுவத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டிக்கான ரூ.3,343 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைத் பெற்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நார்வே வீரர் கார்ல்சென், சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்