Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 5th November 2018

உலக செய்திகள்
  1. இந்திய – ஜப்பானிய விமானப் படைகளுக்கு இடையேயான, ஷினியு மைத்ரி – 18 (SHINYUU Maitri – 2018) என்ற இருதரப்பு கூட்டுவிமானப்படை பயிற்சி இந்தியாவின் ஆக்ரா நகரில் டிசம்பர் 03-07 வரை நடைபெறுகிறது.
தேசிய செய்திகள்
  1. செலவினங்கள் துறை செயலராக இருந்த அஜய் நாராயண் ஜா (Ajay Narayan Jha), நிதித் துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  2. கிம்பர்லி செயல்முறையின் (Kimberley Process) தலைமை பதவிக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  3. 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய திறன்கள் (India Skills) அறிவிக்கையின் 6-வது பதிப்பின் படி, இந்தியாவில் அதிகபட்ச வேலைவாய்ப்பு திறன்களுடன், ஆந்திரப் பிரதேச மாநிலமானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  4. நாட்டில் பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 181 என்ற இலவச தொலைபேசி எண் மத்திய அரசு அறிமுகம் செய்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. ரஷ்ய நாட்டின் “சோயுஸ் எம்.எஸ்.11” (SOYUZ MS-11) ரக இராக்கெட், மூன்று விண்வெளி வீரர்களுடன், டிசம்பர் 03 அன்று கஜஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செலுத்தப்பட்டது.
  2. அமெரிக்காவின் வாசிங்டனில் உள்ள அறிவியலாளர்கள் ரேடியோ அதிர்வெண் கதிரியக்கத்தினைப் பயன்படுத்தி முதன்முறையாக என்சைம்களை உருவாக்கியுள்ளதாக, ACS உயிரிபொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
  1. உலக மண் தினம் (World Soil Day) – டிசம்பர் 05