Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 6th December 2018

உலக செய்திகள்
 1. UNFCCC (காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கட்டமைப்பு அவை), தரப்புகளின் 24ஆவது மாநாடு (COP 24) ஆனது போலந்தின் கடோவிஸ் நகரத்தில் நடைபெறுகிறது.
 2. ‘ஆதரவற்றோரை கடத்தி வியாபாரம் செய்தலை – Orphanage Trafficking’ நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவமாக அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.
 3. மியான்மரில் வாழும் ரோஹிங்கிய சிறுபான்மையினரின் மீதான வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதில் தோல்லியடைந்ததால், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியாதைக்குரிய தலைவர் ஆங் சான் சூகீயிடமிருந்து பாரிஸ் சுதந்திர விருது பறிக்கப்பட்டுள்ளது.
 4. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க G20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, 12 ஆண்டுகால இடைவெளிக்குப் பின், அர்ஜென்டீனாவின் பியூனஸ் ஏர்சில் 2ஆவது ரஷ்யா – இந்தியா – சீனா (RIC) முத்தரப்பு பேச்சுவார்த்தை பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் ஆகியோரிடையே நடைபெற்றது.
 5. கேம்பிரிட்ஜ் அகராதி ‘நோமோபோபியா’ என்ற சொல்லை, 2018ஆம் ஆண்டின் ‘மக்களின் சொல்’(People’s World) என அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி இல்லாமலோ, அதைப் பயன்படுத்த முடியாமலோ இருக்கும்போது ஏற்படும் படபடப்பு, கவலை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் ‘Nomophobia – No Mobile Phobia’.
 6. வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்ற இந்திய – ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு (UAE) இடையேயான கூட்டுக்குழு கூட்டம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
 1. மாற்றுத்திறனாளிகளுக்கு டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்காக UNESCO/எமிர் ஜபீர் அல்-அஹ்மத் அல் ஜபீர் அல் சபா பரிசுக்கு வங்கதேச மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் வழக்குரைஞரான வஷ்கர் பட்டாச்சார்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 2. முன்னாள் சர்வதேச தடகள மற்றும் தொழிலதிபரான ஜான் ரிட்ஜென், IAAF – யின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 3. இஸ்ரோவின் ஜிசாட் – 11 (GSAT – 11) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
 4. முழு கடலோர பாதுகாப்பு கருவியின் வலிமையை சோதிக்க இந்திய கடற்படை அடுத்த மாதத்தில் ஒரு பெரிய அளவிலான கடலோர பாதுகாப்பு பயிற்சி “Tropex” நடத்த உள்ளது.
 5. நீர்வள ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி புதுடெல்லி இந்தியா நீர்வாழ் உச்சி மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்துள்ளார்.
 6. அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திராவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரங்களை இணைக்கும் இந்தியாவின் மிக நீண்ட இரயில்பாதை பாலமான போகிபல் பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 25-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
 7. இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(CII), (வேளாண் தொழில்நுட்ப இந்தியா-2018) 13ஆவது கண்காட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சண்டிகரில் தொடங்கி வைத்தார்.
 8. இந்தியாவின் முதல் ‘ஆந்தை விழா’ புனேவின் புரந்தார் வட்டத்திலுள்ள பிங்கோரி கிராமத்தில் நடைபெற்றது.
 9. ஜெர்மனியில் உள்ள முனிச் நகரத்தில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF) பொதுக்குழு கூட்டத்தில், 4 துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.