Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 11th January 2019

உலக செய்திகள்
  1. உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2019 (GAS – 2019 ) ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
  1. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், மாநில சட்ட ஆணையத் தலைவராக K. ஹஞ்சுரா (M.K. Hanjura) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
  2. சமூக ஊடகங்களில் “மாற்றத்தை உண்டாக்கும் பெண்களை” அறிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “WEB WONDER WOMAN” என்ற ஆன்லைன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  3. இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான (India’s Longest Single Lane Steel Cable Suspension Bridge) பியொருங் பாலமானது (BYORUNG – BRIDGE) அருணாச்சல பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்டு-வால் திறந்து வைக்கப்பட்டது.
  4. சாலை விதிகளை மீறி செயல்படுபவர்களை பற்றி புகார் அளிக்க உதவுவதற்காக, “போலீஸ் இ-கண்” (Police E-Eye App) என்ற செயலியை கோயம்புத்தூர் நகர போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சீனாவில் இளம் பெண் ஒருவருக்கு 72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர். சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள 26 வயதான மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
  2. புவிசார் தொடர்புகளுக்கான ஸோங்ஸிங் 2 டி ((Zhongxing-2D)) என்ற புதிய செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 2018 – 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் 3 சதவீதமாகவும், 2019 – 2020ஆம் ஆண்டுகளில் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கிரிக்கெட் சங்க கவுன்சிலின் (ICC) 105வது உறுப்பினராக அமெரிக்கா இணைந்துள்ளது.