Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th January 2019

உலக செய்திகள்
  1. ஷென்லி அமைப்பு வெளியிட்டுள்ள “உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்” பட்டியலில், இந்தியாவானது, மொத்தம் 190 நாடுகளில் 79வது இடம் பிடித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. சந்திரிகா சுப்ரமணியம் என்பவர் எழுதிய “இணைய குற்றங்களும், இணைய வெளிச் சட்டங்களும்” என்ற நூலானது, டாக்டர். அப்துல்கலாம் தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  2. கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் “நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தை” தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
  3. பொருளியல் புலனாய்வு அமைப்பின், (EIU – Economist Intelligence Unit), 2018ம் ஆண்டின் ஜனநாயகக் குறியீட்டு (EIP Democracy Index 2018) பட்டியலில் இந்தியா 41வது இடம் பிடித்துள்ளது.
  4. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரான மலாலா யூசுப் (Malala Yousafzai) எழுதிய “WE ARE DISPLACED” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
  5. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்திவரும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை, இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனமும் எல் அண்ட் டி நிறுவனமும் தயாரிக்க உள்ளன.
வர்த்தக செய்திகள்
  1. உலக வங்கி வெளியிட்டுள்ள, தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில்(2019) இந்தியாவானது 23 இடங்கள் முன்னேறி உலகளவில் 77வது இடத்தில் உள்ளது.
  2. பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக செபி (SEBI) அமைப்பானது, ஷங்கர் டே (Shankar De) என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. அனைத்து இந்திய குத்துச்சண்டை சங்கம்(AIBA – All India Boxing Association) வெளியிட்டுள்ள, சர்வதேச குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மேரிகோம் முதலிடம் பிடித்துள்ளார்.
  2. சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

No comments:

Post a Comment