உலக செய்திகள்
- நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும், 2019ம் ஆண்டுக்கான “பிலிப் கோட்லர் – பிரசிடென்ஷியல் விருது” (Phillip Kotler Presidential award) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
- ஹிரோஷிமா (ஜப்பான்) -வில் உலகின் முதல் செயற்கை விண்கல் மழையை அந்நாட்டு அரசு உருவாக்க உள்ளது. (World First Artificial Meteor Shower).
- இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே, அணு உலைக்கான (இந்தியாவின்) “யூரேனிய இறக்குமதி” ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- ஆசிய நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான, 7வது “ஆசியான் – இந்தியா சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மாநாடு” வியட்நாம் – இல் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
- பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீட்டை வழங்கிய இரண்டாவது மாநிலமாக ஜார்கண்ட் உருவெடுத்துள்ளது. மேலும் முதல் மாநிலம் – குஜராத் மூன்றாவது மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும்
- இரண்டாவது உலக ஆரஞ்சு திருவிழாவானது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது.
- மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கான, “தீன் தயாள் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு திட்ட” மாநாட்டின் 2ம் பதிப்பு (2nd regional conference on deendayal disabled rehabilitation scheme) மும்பையில் (மகாராஷ்டிரா) நடைபெற்றது.
- இந்தியாவின் 2வது பாதுகாப்பு தளவாடங்கள் கண்டுபிடிப்பு மையமானது, நாசிக் (மகாராஷ்டிரா) நகரில் அமைய உள்ளது.
No comments:
Post a Comment