உலக செய்திகள்
- சீனாவில் தடுப்பு காவலில் உள்ள சீன வழக்கறிஞர், யூ வென்செங் (Yu Wensheng), 2019 ஆம் ஆண்டின் “பிராங்கோ – ஜெர்மன் மனித உரிமைகள்” விருதை (Franco – German Human Rights Award) பெற்றுள்ளார்.
தேசிய செய்திகள்
- இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இஸ்ரோ-வானது, 2019 ஆம் ஆண்டின் தனது முதல் ராக்கெட்டான “பி.எஸ்.எல்.வி – சி 44” – ஐ சதீஸ்தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
- இந்திய சினிமா வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மும்பையில்(மகாராஷ்டிரா), “முதல் இந்திய சினிமா அருங்காட்சியகம்” (National Museum of Indian Cinema, Mumbai) அமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலையான “L & T” நிறுவனமானது, “கே9 வஜ்ரா (K9 Vajra)” ரக பீரங்கிகளை தயாரிப்பதற்கு, சூரத் நகரில்(குஜராத்) உள்ள ஹாஜிரா என்ற இடத்தில் “பீரங்கி உற்பத்தி பிரிவை” தொடங்கியுள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான “பிஜூ ஸ்வத்திய கல்யான் யோஜனா” என்ற திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- இந்திய பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளுக்கான (Chief Coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக “முகமது அலி கியாமர்” (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை “வினேஷ் போகத்” (Vinesh Phogat), “லாரெஸ் உலக விளையாட்டு” விருதுக்கு (2019 Laureus World Sports Awards) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment