Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 24th January 2019

தேசிய செய்திகள்
  1. அண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் என்ற சாதனையை ஐபிஎஸ் அபர்ணா புரிந்துள்ளார்
  2. இந்தியப் பெண்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்களை அங்கீகரிப்பதும் ஊக்குவிப்பதுமே நோக்கமாகக் கொண்ட, மகளிருக்கான குரல் விருதானது, அபீஜெய் கொல்கத்தா இலக்கிய திருவிழாவில், அமெரிக்காவில் உள்ள இந்திய கவிஞரான “ரஞ்சனா முரளிக்கு” வழங்கப்பட்டுள்ளது.
  3. உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டை (பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  4. ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு பிறகு மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறையை ஆய்வு செய்வதற்காக, பீகார் துணை முதல்வாரன “சுஷில் மோடி” தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
  5. இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. கைத்தறி நெசவாளர்களுக்கு உதவுவதற்காக மைக்ரோசாப்ட் இந்தியாவானது, அதன் ரீவேவ் (re-weave) திட்டத்தின் கீழ், re-weave.in என்ற மின்னனு வர்த்தக தளத்தை தொடங்கியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. 2019-20 நிதி ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கலாம் என கிரிசில் தரச்சான்று நிறுவனம் கணித்துள்ளது
  2. முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை வகிக்கிறது.
விளையாட்டு செய்திகள்
  1. மலேசியாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உலக கோல்ஃப் சாம்பியன் ஷிப் போட்டியில் 8 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவின் “கார்த்திக் சிங்” சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  2. 2020ல் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தலைவராக, பிரேந்திர பிரசாத் பைஷ்யா(இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment