Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 25th January 2019

உலக செய்திகள்
  1. உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவானது, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் அமெரிக்கா முதலிடத்தையும் சீனா இரண்டாவது இடத்தையும் ஜெர்மனி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
  2. துருக்கியில் ஒட்டகங்களுக்கு இடையே மல்யுத்தப் போட்டி நடைபெற்றது
தேசிய செய்திகள்
  1. டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி என்ற பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார்.
  2. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தியாகும் முக்கிய பொருளை காட்சிப்படுத்துவதற்காக “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One district one product)” என்ற திட்டத்தை உத்திரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7,500இல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
  4. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 122வது பிறந்தநாள் விழாவை (ஜனவரி 23, 2019) நினைவு கூறும் வகையில் செங்கோட்டையில்(புதுடெல்லி) சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை இந்திய பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
  5. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும் நல்ல சிந்தனையையும் வளர்க்கும் வகையில் தமிழக காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து, தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் “மாணவர் காவல்படையை” தொடங்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இஸ்ரோவானது, சதிஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் (ஆந்திரப் பிரதேசம்) இருந்து, “கலாம் சாட் மற்றும் மைக்ரோசாட்-R” என்ற இரு செயற்கை கோளை, PSLV C- 44 (பி.எஸ்.எல்.வி சி-44) என்ற இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. சர்வதேச செலவாணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டில் 5 சதவீதமாகவும், 2020ல் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மூன்று விருதுகளை விராட் கோலி (இந்திய அணியின் கேப்டன்) பெற்று சாதனைப் படைத்துள்ளார். 2018-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், 2018-ன் சிறந்த ஒருநாள் தொடர் வீரர் மற்றும் 2018-ன் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது.
  2. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், 2018ம் ஆண்டுக்கான “வளரும் வீரர் விருது” ரிஷப் பந்த்-க்கு (இந்திய இளம் விக்கெட் கீப்பர்) வழங்கப்பட்டுள்ளது.