Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 31, 2019

உலக செய்திகள்
 1. டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 78வது இடத்தில் உள்ளது. மேலும் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது
தேசிய செய்திகள்
 1. சுஞ்சய் சுதிர் மாலத்தீவிற்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
 2. சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ஜே. அல்போன்ஸ் சிக்கிமில் முதல் ஸ்வேதேஷ் தர்ஷன்(Swadesh Darshan) என்ற சுற்றுலா திட்டத்தை ஆரம்பித்தார்
 3. கடற்படை தளபதியின் துணைத் தலைவராக அட்மிரால் ஜி அஷோக் குமார் பொறுப்பேற்றார்
 4. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), யுபிஎஸ்சி-இன் உறுப்பினராக ராஜீவ் நயன் செபியை நியமித்தது.
 5. உத்தரப்பிரதேச அரசு உலகின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வேயான கங்கா எக்ஸ்பிரஸ்வேயை பிரயாகராஜின் மேற்கு உத்தரப்பிரதேசத்துடன் இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது
 6. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள தால்கட்டோர ஸ்டேடியத்தில் "பரிக்ஷ பே சர்ச்ச 0"(Pariksha Pe Charcha 2.0) என்ற தேர்வின் அழுத்தத்தை கையாள்வதற்கான வழிகளை பற்றி விவாதித்தார்
 7. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைமையிலான எட்டு உறுப்பினர்களை கொண்ட லோக்பால் தேர்வு குழுவின் முதல் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது
 8. பாகிஸ்தானின் உள்ள குவாம்பர் – ஹாதாத்கோட் பகுதியின் சிவில் கோர்ட் நீதிபதியாக “சுமன் குமாரி” என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
 9. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்(அமெரிக்கா) உயரிய விருதான “கர்நாட் விருது”, இந்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 10. குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, “பரிசு பெட்டகம்” வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு தொடங்கியுள்ளது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் “டிஎப் 26 (DF 26)” என்ற ஏவுகணையை சீனா(CHINA) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
 1. நாகாலாந்தில் கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் மாநிலத்தின் முதல் ஆஸ்ட்ரோ ட்ரோஃப்(Astro Turf) கால்பந்து பிக்ஸை நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ திறந்து வைத்தார்.
 2. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசை (Test All-Rounder Ranking) பட்டியலில் மேற்கு இந்திய அணி கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடம் பிடித்துள்ளார்.
இரங்கல்
 1. முன்னாள் ரஞ்சி ட்ரோபி வீரர் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளரான அமிரிக் சிங் நாகரா காலமானார்

No comments: