Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 7th January 2019

உலக செய்திகள்
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகளை, பாபுக் புயல்(Babuk cyclone) தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையமானது ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை வழங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்திய புலம்பெயர் மக்கள் மீது கவனத்தைக் கொண்ட, உலகலாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணையதளமாகிய “Remit 2 India’’- விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ‘விராட் கோலி’ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் கடன் உதவி அளிப்பதற்கான, மிஷன் சக்தி மாநாடு ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு – மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்குதல்.
  3. பெண்களுக்கு பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் கிடைக்க வழி செய்யும், “உஜ்வால சானிடரி நாப்கின் யோஜனா”(Ujjwala Sanitary napkin Yojana) என்ற திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
  4. சூரிய ஒளியை பயன்படுத்தி நீர் இரைக்கும் சோலார் பம்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்தவதை ஊக்குவிக்க, மகாராஷ்டிர மாநில அரசானது “அடல் சோலார் குருஷி பம்ப் யோஜனா” (Atal solar Kurushi Pumb Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  5. இந்தியாவின் முதல் அதிவேக விரைவு இரயில் சேவை தேஜாஸ்(Tejas). இது 200 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. இந்த இரயில் சேவையானது தமிழகத்தில் சென்னை- மதுரை வழித்தடத்தில் ஜனவரி 27 முதல், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட உள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் – 2019(2019 – Maharashtra Open Tennis) போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுவில் கெவின் ஆண்டர்சனும் (தென்னாப்பிரிக்கா) ஆண்கள் இரட்டையர் பிரிவுலும் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடியும் (இந்தியா) வெற்றிபெற்றனர்.