Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 9th January 2019

உலக செய்திகள்
  1. ஆசியாவில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்காக, அமெரிக்க நாடானது சமீபத்தில் (ARIA Act – Asia Reassurance Initiative Act) “ஆசியா ஆதரவு புதுமுயற்சி சட்டம்” என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.
  2. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. தமிழகத்தின் பெரிய மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டு 33வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது திருநெல்வேலி மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது
  2. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடி பெயர்ந்துள்ள முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்காக, இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  3. உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் கும்பமேளா திருவிழா நடைபெறும் இடத்தை எளிதில் அடைவதற்காக வட மத்திய இரயில்வே துறையானது, “இரயில்கும்ப் சேவா” (Rail kumbh Seva Mobile app) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  4. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற 106வது இந்திய அறிவியல் மாநாட்டில், ஆண்டு கண்காட்சி விருதானது (Exhibitor of the year award) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை (DRDO) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
வர்த்தக செய்திகள்
  1. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை கணக்கிடும் அமைப்பான, மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO – Central Statistical Office) ஆனது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2018-2019 ஆண்டுகளில் 2 சதவீதமாக வளர்ச்சி அடையும் என கணித்துள்ளது.
  2. இந்திய ரிசர்வ் வங்கியானது செபியின் முன்னாள் தலைவரான K. சின்ஹாவின் தலைமையில் MSME துறையைப் புதுப்பிப்பதற்கான 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவினை அமைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் தற்போது வரை மொத்தம் 67 கோல்கள் அடித்துள்ளார்.
  2. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சீனா வெற்றி

No comments:

Post a Comment