Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12, 2019

உலக செய்திகள்
 1. கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 12, 2019

தேசிய செய்திகள்
 1. அரியானாவில் ரூ.2,035 கோடியில் தேசிய புற்றுநோய் மையத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
 2. தேஜாஸ் எம்கே1 என்ற இலகு ரக போர் விமானங்களை இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இந்திய விமானப்படையில் கூடுதலாக 4 தேஜாஸ் விமானங்கள் சேர்க்கப்பட உள்ளன. பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டில்ஸ் லிமிடெட், தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது.
 3. பூட்டான் நாட்டுக்கான இந்தியத் தூதராக ருச்சிரா கம்போஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 4. நாட்டில் ஒட்டுமொத்தமாக சரக்கு மற்றும் சேவை வரி வசூலித்தலில் தமிழ்நாடு 4வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் மஹாராஷ்ட்ரா முதலிடத்திலும் உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும் உள்ளது
 5. ஆந்திரப் பிரதேச மாநில அரசானது விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘அன்னதத்தா சுஹிபாவா’ (Annadata Sukhibhava Scheme) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
 6. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்தவும் “சுவஸ்த் நாரி – சக்தி ஹமாரி” என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society – ICS) தொடங்கியுள்ளது.
 7. தைவானின் புதிய பிரதமராக சூ செங் - சங்(Su Tseng-chang) நியமிக்கப்பட்டுள்ளார்
 8. இந்திய நாட்டின் கடவுச்சீட்டை(Passport) பயன்படுத்தி ஒருவர் 61 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாமல்(Visa) பயணம் செய்ய இயலும்.இப்பட்டியலில் ஜப்பான் முதலிடத்திலும் சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்திலும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 9. மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரியான ஏ.பி. மகேஸ்வரி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக செய்திகள்
 1. அமெரிக்க நிறுவனமான சிக் சாயர் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் 72,400 SIG 716 வகை நவீன ரக துப்பாக்கிகள் வாங்குவதற்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
 1. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை தரவரிசைப் பட்டியலில், 45 – 48 கி.கி., ‘Light fly’ ’ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.
 2. பூடான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரர் எம்.ஜனகன் தங்கம் வென்றார்.
 3. உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மேலும் இந்திய வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடத்தை பிடித்துள்ளார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, செக் குடியரசு வீராங் கனை கிவிடோவா மற்றும் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்

1 comment:

Unknown said...

Good informations.thank you.