Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 15, 2019

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2019, Tamil Current Affairs Feb 2019, இன்றைய நடப்பு நிகழ்வுகள்

தேசிய செய்திகள்
  1. ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவரான அஸ்வனி லோகானி மீண்டும் இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அரசு நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தவிர அனைத்து முதியோர்களுக்கும் ஓய்வூதியம் அளிப்பதற்க்காக முதலமைச்சரின் முதியோர் ஓய்வூதியத் திட்டதை (Mukhya Mantri Vriddha Pension Yojana (MMVPY)) தொடங்கி வைத்துள்ளார்
  3. வது இளைஞர் ரியல் எஸ்டேட் அபிவிருத்தி  மாநாடு (CREDAI) YouthCon 2019 புது டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு NexGEN - அடுத்த தலைமுறை என்பதாகும்
  4. பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. யுனிசெப் நிறுவனமானது மஹாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டிற்காக (WCD) கோவா அரசுடன் இணைந்து குழந்தை பாதுகாப்பு பற்றிய புரிந்துணர்தல் விவாதத்தை நடத்தியது. இதன் கருத்துரு கோவாகுழந்தை பாதுகாப்பில் உள்ள முக்கிய சவால் " என்பதாகும் .
  6. கேரளாவில் “கார்த்தியாயினி” என்ற 96 வயது மாணவி காமன்வெல்த்தின், கற்பதற்கான நல்லெண்ணத் தூதராக (Commonwealth of Learning Goodwill ambassador) நியமிக்கப்பட்டுள்ளார்.
  7. இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான “மில்லியன் டாலர் டான் டேவிட் பரிசு” (Million Dollar Dan David Prize), இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் சஞ்சய் சுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  8. நாட்டின் இரண்டாவது “மின்னணு தொழில் முனைவோர் பூங்காவது” (Electropreneur Park), ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் தொடங்கப்படவுள்ளது.

விளையாட்டு செய்திகள்
  1. டெரிக் பெரேரா(Derrick Pereira) இந்தியாவின் U-23 கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
  2. இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹனுமா விஹாரி இரானி கோப்பை போட்டியில் ஹாட் ட்ரிக் சதம்(தொடர்ந்து 3 சதம் அடித்தல்) அடித்து சாதனை படைத்துள்ளார்.
  3. எம்.ஆர்.எஃப் சாலஞ்ச் பட்டத்தை (MRF Challenge title) வென்ற முதல் பெண் ஓட்டுநர் எனும் பெருமையை இங்கிலாந்தின் ஜாமி சாட்விக் (Jamie Chadwick) பெற்றுள்ளார்.
இரங்கல்
  1. ஜெர்மன் நோபல் பரிசு வென்ற மான்ஃப்ரெட் ஈஜென் காலமானார்